லியோ படம்
விஜய்யின் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி வெளிவந்த படம் லியோ. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் வசூலில் பல சாதனைகள் செய்து வருகிறது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே லியோ ப்ளாக் பஸ்டர் ஹிட் என படம் வெளிவந்த முதல் நாளே அறிவித்துவிட்டனர்.
லியோ படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணங்களில் ஒன்று இசையமைப்பாளர் அனிருத். இவருடைய பின்னணி இசை தான் படத்தின் திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு இல்லாமல் பார்த்துக்கொண்டது.

சம்பளத்தை உயர்த்திய அனிருத்
இந்நிலையில், லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளாராம்.
ஆம், இதுவரை ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கி வந்த அனிருத், லியோ படத்திற்கு பின் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.