
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.
குறித்த திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளார்.
இந்த நிலையில் விஜய் நடிக்கவுள்ள 68 ஆவது திரைப்படத்திற்கான பூஜையினை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்துவதற்கு படக்குழு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தொடர்பிலான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
விஜய் தற்போது தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வெளியாகும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.