தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் R.S. சிவாஜி. இவர் பிரபல நடிகரும், இயக்குனருமான சந்தானா பாரதியின் சகோதரர் ஆவார்.
அபூர்வ சகோதரர்கள், கோலமாவு கோகிலா மற்றும் கார்கில் போன்ற படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பார்.
இந்நிலையில், இன்று காலை நடிகர் R.S. சிவாஜி இன்று மரணமடைந்துள்ளார். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இவருடைய மரணத்திற்கு திரையுலக சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.