கவின் இயக்கிய “டாடா” திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இந்தப் படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு அடுத்ததாக விக்ரமின் மகன் துருவை இயக்கவுள்ளார்.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்று ஒருபுறம் செய்திகள் பரவி வருகின்றன.
ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என ரஹ்மான் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
“அப்படி இல்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம். திறமையான மற்றும் அழகான நடிகர் துருவ் மற்றும் அவரது குழுவினர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.