முதலீட்டாளர்களை கடனாளியாக்கியது MTFE நிறுவனம்

சமீப காலத்தில் மக்கள் மத்தியில் பாரிய அளவில் பேசப்பட்ட நிறுவனமாக MTFE காணப்படுகிறது. முதலீட்டாளர்களை கடனாளியாக மாற்றியது இந்த நிறுவனம்.இந்த MTFE ஆனது AI TRADINGற்கு பிரசித்தி பெற்ற நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். முதலீடு செய்யும் தொகை கேட்ப ஒவ்வொரு நாளும் இலாபம் கிடைக்கும். அதேபோல நட்டமும் ஏற்படும். இதில் கணக்கு மிகுதி இலங்கை ரூபாவாகவோ அமெரிக்க டாலராகவோ காட்டப்படாது மாறாக USDT (கிரிப்டோ கரன்சியாகவே) காட்டப்படும்.

இதில் டிபோசிட் செய்யும்போதும் USDT ஆகவே டிபோசிட் செய்ய வேண்டும். (USDT என்பது ஒரு கிரிப்டோ கரன்சி ஆகும்) கிரிப்டோ கரன்சியால் ஏற்படும் லாப நட்டங்களுக்கு இலங்கை மத்திய வங்கி எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

நேற்றைய தினம் 17 ஆகஸ்ட் 2023 வழமை போல் AI Trading நடந்துள்ளது அதில் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் முதலீடு அனைத்தும் நட்டமாகி மறை இலக்கங்களாக காட்டப்பட்டுள்ளது. இச்சமயத்தில் முதலீட்டாளர்கள் அவர்களது முதலிடை திரும்ப பெற்றுக் கொள்ள முடியாமல் காணப்படுகினறனர.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *