விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு

விசேட தேவையுடையோர் நலன்புரிக்காக ஒதுக்கப்படும் கொடுப்பனவுகள் இந்த ஆண்டு முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் இதனைக் குறிப்பிட்டார்.

அதன்படி,

விசேட தேவையுடையோருக்கான கல்வி உதவித் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.

விசேட தேவையுடையோருக்கான சுயதொழில் உதவித்தொகை ரூ.25,000 இருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்படும்.

விசேட தேவையுடையோருக்கான உபகரணங்களுக்காக வழங்கப்படும் ரூ.15,000 உதவித் தொகை ரூ.35,000 ஆக உயர்த்தப்படும்.

விசேட தேவையுடையோருக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் ரூ.250,000 உதவித்தொகை 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படும்.

விசேட தேவையுடையோர்களின் வீடுகளை புனரமைக்க வழங்கப்பட்ட ரூ.150,000 உதவித்தொகை ரூ.250,000 ஆக உயர்த்தப்படும்

விசேட தேவையுடையோருக்கான கழிப்பறை கட்ட வழங்கப்படும் உதவித்தொகை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *