உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதா?

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறாக வழிநடத்தும் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் Fact Crescendo Sri Lanka தெரிவித்துள்ளது.
இதுவரை பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உறுதிப்படுத்தியுள்ளதாக Fact Crescendo Sri Lanka தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜயசுந்தர வெளிப்படுத்தியதாக உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *