மருத்துவமனை ஊழியர்களின் கூற்றுப்படி, இந்த பள்ளியைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலை களஞ்சியசாலையில் தீ பரவியதால், புகையினால் மாணவர்கள் சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தானை பகுதியில் உள்ள இரசாயன ஆலைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (08/08/2023) காலை கந்தானை – வீதி மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கந்தானை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா மற்றும் நீர்கொழும்பு தீயணைப்பு பிரிவினரும், கடற்படையின் தீயணைப்பு பிரிவினரும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.