அஸ்வெசும திட்டம் தொடர்பில் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, ( பெயர் பட்டியல்)

அஸ்வெசும பயனாளிகளுக்கான முதலாவது தவணைக் கொடுப்பனவானது, இந்த வாரம் வழங்கப்படவுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
பயனாளர் பிரிவிற்கேற்ப, மாதாந்தம் 15000/-,8500/-,5000/- என கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அத்துடன் மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை பரிசீலிக்கப்பட்ட பின், மற்றொரு பயனாளர் குழுவொன்றும் இத்திட்டத்தில் இணைக்கப்படும் என்று சமூக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

அஸ்வெசும் பயனாளர்களுக்கான வங்கி கணக்குகளைத் திறக்கும் செயற்பாடு 95% வீதம் நிறைவடைந்துள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ், இருபது இலட்சம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவுகள் வைப்பிடலிடப்படவுள்ளன.

தற்போது சமுர்த்தி உதவித்தொகை பெறும் 1,280,000 குடும்பங்கள் நலன்புரி உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *