இலங்கை போக்குவரத்து சபைக்குட்பட்ட சுமார் 7 டிப்போக்களில் உள்ள ஊழியர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபை டிப்போ பரிசோதகருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தே இன்றைதினம் (31.07.2023) குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவ்பத்தானை, பொலன்னறுவை, கெபித்திகொல்லேவ மற்றும் கந்தளே ஆகிய பேருந்து டிப்போக்களுக்கு உட்பட்ட ஊழியர்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பை செய்துள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பால் சுமார் 400 பேருந்துகள் சேவையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக வேலைக்குச் செல்லவும், அன்றாடப் பணிகளை மேற்கொள்ளவும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.