தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்துடன் மோதி பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்று (24) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் ஆராச்சிக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் எதிர் திசையில் பயணித்த பேரூந்துடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியுள்ளது.
காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் , ஆண் ஒருவரும் 7 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டது